கனமாக உள்ளதால் என்னவோ
மனம் கனக்கிறது
கணநேரத்தில்
ரயில் மோதி
மாய்ப்பதால்
பாசப்பிணைப்பினை பார்த்து
மனம் பாடாய் படுகிறது
தாய் யானை
தன் குட்டியை
பிரியாமல் போராட்டம் நடத்துவதால்
எல்லை தாண்டி
நம் எல்லைக்குள்
வந்துவிட்டதாக பிதற்றுகிறோம்
ஆறறிவு இருந்தும்
அறியாமையோடு
மனிதனுக்கு மண்டியிடாமல்
முரண்டு பிடித்தால்
மதம் பிடித்ததாக கூறுகின்றனர்
மதத்தில் மூழ்கிய மனிதர்கள்
அவற்றின் வாழ்விடங்களை
அழித்து வசிப்பிடங்கள்
அமைத்து நிம்மதி கொள்கிறோம்
அவற்றை கொன்று
கடைசியில்
எல்லைகள் சுருங்கி
எல்லைகள் அற்று
நாடோடிகளாய்
யானைகள்
I WROTE THIS POEM LAST MONTH TO PUBLISH IN THE MONTHLY MAGAZINE RUN BY ANNA HOCKEY TEAM NAMED "வளைகோல் மலர்கள் " . THEY PUBLISHED THIS POEM IN THEIR MAGAZINE, LAST MONTH . THEY ALSO APPRECIATED ME WITH 100 RS CASH AMOUNT . I REALLY WANT TO APPRECIATE MY HOCKEY TEAM WHO WERE DOING A LOT OF THINGS TO IMPROVE THE TEAMMATES .
AN APPLAUSE TO MY HOCKEY TEAM FOR MOTIVATING ALL US IN EACH AND EVERY TASK .