Wednesday, 29 November 2017

வெற்றி

வெற்றிக்கு
பாதைகளும் படிகட்டுகளும் மட்டுமே வழி
இங்கு Lift  என்பதே கிடையாது.

பாம்பு

வளைந்து வளைந்து செல்வேன்
மகுடியான
உன் சொல்லுக்கு ஆடுவேன்
ஆனால் தயவு செய்து தீண்டாதே பிறகு தீண்டிவிடுவேன்
பாம்பாய்.

ஆதிக்கம்

பேச்சால் அரங்கத்தை ஆட்கொள்ள முடிந்த அவனால்
அவள் அருகில் மட்டும் பேச்சும் இல்லை மூச்சும் இல்லை

அடக்க ஓடுக்கமாய் அவன்
அவளின் அருகில்
ஆண் ஆதிக்கம் இல்லை
அவளின் ஆதிக்கம்.

பள்ளியில் நூலகம்

அத்திப்பட்டியை போல்
வரைப்படத்தில் மட்டுமே
உள்ளது

வெற்றியை வசப்படுத்துவது போல்
காலஅட்டவணையில் உள்ளது
ஆனால் செயல்படுத்துவதும்
இல்லை
செய்ய அனுமதிப்பதும்
இல்லை

விசாலமான அந்த அறையை
விளம்பரங்களில் மட்டுமே கண்டதுண்டு,
விபத்தாய் கூட அதை கண்டதில்லை.

காலப்போக்கில் கொன்று விட்டனர்
கல்விக்கொள்கையால் கொடூரமாய்
நூற்றுக்கணக்கான நூலகங்களை.

மரித்தது
அவை மட்டும் அல்ல
அத்தோடு
எங்கள் சுவாசிப்பான வாசிப்பும்.

பகுத்தறிவு

பகுத்தறிவில் பாதி அறிவு இருந்திருந்தால்
கூட
பிரச்சனைகளோ
பிரிவினைளோ இன்றி
பாலைவனக்காடாக மாறாமல்
பசுமைக்காடுகளாகவும்
பாகுபாடுகள்  அற்ற நாடாகவும் இருந்திருக்கும்
என்
"தாய் திரு தேசம்"

Wednesday, 22 November 2017

பாடசாலை

இவ்வுலகம் ஒரு பாடசாலை
கேள்விகள்
பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவை.

நம்பிக்கை

இழந்த நகைகளை கூட மீட்டு விடுவேன் உன்னிடம்
இழந்த நம்பிக்கையை மீட்பது எப்போது

நீட்சி

இப்பிரிவு இத்தோடு முடிந்துவிட வேண்டாம்
இன்னும் கொஞ்சம் நீளட்டும்
நீட்சியின் தொடர்ச்சியாய்
இவ்வுலகில் வெளியாகட்டும்
நம் காதல் தொகுப்பு.

நிரல்

கணிணியில் எழுதப்பட்ட நிரல்களை போல
என் எண்ணத்தில்
உன் நினைவுகள்
ஒளி படங்களாய் ஓடிகொண்டிருக்கின்றன

தேர்வுகள்

வாழ்த்துக்கள்
நீ எதிர்கொண்ட
தேர்வுகள் அனைத்தும் சிறப்பாக அமைந்தன தேர்வு அறையிலும் சரி மணவறையிலும் சரி.

வலிமை

என்னை வலிமை ஆக்கும் ஆனால்
 காதல் வலியும் நிரந்திரமாகட்டும்.

பயணம்

நீ மேற்கொள்ளும் அனைத்து பயணங்களிலும்
உன்னோடு பயணிக்க ஆசை
அது
பேருந்தானாலும் சரி
போர்க்களம் ஆனாலும் சரி

உன்னோடு

வாழ்வது என்றால்
சாகும் வரை உன்னோடு
இல்லை
செத்துமடிவேன் இன்றோடு.

உலகம்

உலகம் என்ன சொன்னாலும் சரி
நீ எதை செய்தாலும் சரி
நான் எதையும் ஏற்றுக்கொள்வதாய் இல்லை
நீ என்னை ஏற்று கொள்ளும் வரை.

காளை

அவன்
காதல் சந்தையில்
இன்று விலை போகாத காளையாக இருக்கலாம்
ஆனால்
நாளை பங்குசந்தையில் கரடியை வீழ்த்தும் காளையாக இருப்பான்.

வினை

வேறு வழியில்லை விலகியே ஆக வேண்டும்
விதியினால் அல்ல
நான் செய்த வினையினால்.
வளைந்து வளைந்து செல்லும் நதிகளை போல
சென்றாலும்
சென்றைடையும் இலக்கு ஒன்று தான்
நாட்களையும் நகரங்களையும் கடந்தாக வேண்டும்
கஷ்டங்களால் களைப்படையக்கூடும்
வற்றி விடலாம் என் தேகம்
வேட்கை என்னும் குருதி குறைந்தால்
நெஞ்சுறுதியுடன் நகர்வேன்
நெடுநாளைக்கு பிறகு
நெடுந்தொலைவில்
நதி கடலை சந்திப்பதை போல்
நானும் உன்னை சங்கமிப்பேன்.

Wednesday, 15 November 2017

சம்மதம்

சிரிப்பிலும் சிந்தனையிலும் சிறந்தவள் நீ
சிறியவன் நான்
சில தேடல்களிலும்
சில சந்திப்புகளிலும்
சரியான துணையை தேர்ந்தெடுத்தாய் சாகும்வரையிலான உறவுக்கு சம்மதம் தெரிவித்து.

நிழல்

உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நிழலோடு நிழலாய் நானும்

விதி

விதி கூட விளையாடுகிறது
வீதியில் உன்னை சந்திக்க நினைத்தால்

Wednesday, 8 November 2017

விடுதலை

விடுதலைக்காக காத்திருக்கிறேன்  
உன் காதல் சிறையில் இருந்து. 

பார்வை

விசாலமான பார்வை
 ஏனோ குறுகியது 
விழித்திரையில் நீ குடியிருப்பதால்.

உயரம்

 என் உயரம்
 ஏனோ எனக்கு உதவவில்லை 
 நீ இருக்கும் உச்சத்தை தொட.

எழுத்தாளன்

 உன் கரங்களை
 உன் இணையர் பிடித்திருந்த சமயம் 
 என் கரங்கள் 
 என்னை அறியாமல்
 எழுத்தாணியை பிடித்தன 
 ஒரு  எழுத்தாளனாய் 
 என் கண்ணீர் கலந்த காதலையும்
 என் காதல் கனவுகளையும் 
 பதிவுசெய்வதற்கு.

சிந்தனை

சிதறிய சிந்தனை அனைத்தும் 
காதல் என்னும் குவி லென்ஸால்
 உன் மீது குவிகின்றன.

விபத்து

நான் விபத்தில் சிக்கிய தருணத்தை விட
 நீ என்னை விலகிய தருணம் தான் மிகவும் வலித்தது.

Thursday, 2 November 2017

முடிவு

உன் முடிவுகள் அனைத்தும் சரியானதாக இருக்க கண்டிருக்கிறேன்  நான்.
இப்பொழுதும் கூட மணமேடையில்
உன் துணையுடன்
உன்னை காண்கையில்.

வாழ்க்கை போராட்டம்

வாழ்க்கை போராட்டம் நீலக்கடல் போன்றது
நீந்தியே கடந்தாக வேண்டும்
நின்று விடாதே 
முயற்சியும் விட்டுவிடாதே பிறகு நம் மூச்சி நின்றுவிடலாம்
திசையறியாமல் தொலையலாம் திகைத்துவிடாதே
அலைகளால் அடித்து செல்லப்படலாம்
இடை இடையில் கடற்கன்னிகள் (கனவுக்கன்னிகள்) குறுக்கிடலாம் அவை நம் கவனத்தை சிதறடிக்கலாம் சின்னாபின்னமும் கூட
உன் பயணத்தின்  தளபதியும் நீ தான் கட்டுமரத்தின் கேப்டனும் நீ தான்
நீ கட்டமைத்தால்.
ஆழம் அறியாத கடலின் அமைதியை அறிய முயற்சி செய்
ஒரு நாள் நிலத்தை அடைவாய் நினைத்ததையும் கூட
பின் கலங்கரை விளக்கமாய் நீ உன்னை   பின்தொடர்பவர்களுக்கு

குறிக்கோள்

என்னை பார்த்து  குறிக்கோள் இல்லையா என்று கேட்காதே எனக்கும் காதல் என்ற குறிக்கோள் உண்டு

தனிமை

நான்  விபத்தில் சிக்கிய தருணத்தை விட
நீ  என்னை விலகிய தருணம் தான் மிகவும் வலித்தது

எண்ணங்கள்

நமது எண்ணங்கள் ஒரு போதும் ஒன்றியதில்லை என்பதற்காக விலகியே உள்ளாய்
ஒன்றை மட்டும்  புரிந்து கொள்
ஒரே மின்னூட்டம் உள்ள காந்தங்கள் எப்போதும் ஒட்டுவதில்லை என்று

தூண்டில்

காதல் என்னும் பெருங்கடலில்
எனது தூண்டில்
இடையில் செல்லும் மீன்களுக்கானது அல்ல
அது ஒரு மாபெரும் திமிங்கலத்துக்கானது

Saturday, 8 July 2017

கனவு

காதலுக்காக காத்திருப்பதை விட கனவுகளுக்காக தவம்  இரு
காலம் கை கொடுக்கும்
வரலாறு இடம் கொடுக்கும்.