அத்திப்பட்டியை போல்
வரைப்படத்தில் மட்டுமே
உள்ளது
வெற்றியை வசப்படுத்துவது போல்
காலஅட்டவணையில் உள்ளது
ஆனால் செயல்படுத்துவதும்
இல்லை
செய்ய அனுமதிப்பதும்
இல்லை
விசாலமான அந்த அறையை
விளம்பரங்களில் மட்டுமே கண்டதுண்டு,
விபத்தாய் கூட அதை கண்டதில்லை.
காலப்போக்கில் கொன்று விட்டனர்
கல்விக்கொள்கையால் கொடூரமாய்
நூற்றுக்கணக்கான நூலகங்களை.
மரித்தது
அவை மட்டும் அல்ல
அத்தோடு
எங்கள் சுவாசிப்பான வாசிப்பும்.
No comments:
Post a Comment