Thursday, 2 November 2017

வாழ்க்கை போராட்டம்

வாழ்க்கை போராட்டம் நீலக்கடல் போன்றது
நீந்தியே கடந்தாக வேண்டும்
நின்று விடாதே 
முயற்சியும் விட்டுவிடாதே பிறகு நம் மூச்சி நின்றுவிடலாம்
திசையறியாமல் தொலையலாம் திகைத்துவிடாதே
அலைகளால் அடித்து செல்லப்படலாம்
இடை இடையில் கடற்கன்னிகள் (கனவுக்கன்னிகள்) குறுக்கிடலாம் அவை நம் கவனத்தை சிதறடிக்கலாம் சின்னாபின்னமும் கூட
உன் பயணத்தின்  தளபதியும் நீ தான் கட்டுமரத்தின் கேப்டனும் நீ தான்
நீ கட்டமைத்தால்.
ஆழம் அறியாத கடலின் அமைதியை அறிய முயற்சி செய்
ஒரு நாள் நிலத்தை அடைவாய் நினைத்ததையும் கூட
பின் கலங்கரை விளக்கமாய் நீ உன்னை   பின்தொடர்பவர்களுக்கு

No comments:

Post a Comment